அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

Published Date: October 28, 2025

CATEGORY: CONSTITUENCY

தமிழ் இணைய நூலகத்தில் வரலாற்று தகவல் அறியலாம்; அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.

மதுரை உலக தமிழ்ச் சங்க கூட்டரங்கில் தமிழ் முழக்கம், மேடைப்பேச்சு, ஆளுமை திறன், மேம்பாட்டு பயிற்சி மற்றும் பன்னாட்டு பயிலரங்க நிறைவு விழா நேற்று நடந்தது. இதை பங்கேற்ற தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் அவர் பேசிய போது இங்கு 300 பேர் மத்தியில் மட்டுமே நம் பேசுவதாக நினைக்கக் கூடாது. இந்த பேச்சுப்பதிவு செய்யப்பட்டு எப்போது வேண்டுமானாலும் மீளாய்வு செய்யப்படலாம். 

எனவே எப்போதும் எந்த இடத்திலும் எதிர்காலத்தை உணர்ந்தும் பேச வேண்டும். இதே  அரங்கில் நான் பேசிய எத்தனையோ விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. அவற்றை ஏராளமானோர் பார்க்க வாய்ப்புள்ளது. பேச்சாளர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் தமிழ் இணைய நூலகத்தில் வரலாறு முழுவதற்குமான நூல்கள் இருக்கின்றன. அவற்றில் இருந்து கடந்த கால நினைவுகளை தரவுகளை எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார். 

நிகழ்வில் கலெக்டர் பிரவீன் குமார், கோ. தளபதி எம்எல்ஏ., உலகத் தமிழ் சங்க செயலாளர் அருள்,  இயக்குனர் பர்வீன் சுல்தானா, 38 மாவட்ட பேச்சாளர்கள் இலங்கையில் இருந்து வருகை தந்தோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Media: Dinakaran